சித்தர்களின் குரல்

*சித்தர்களின் குரல்*

📌
*பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும்*

📌📌
*மலைகளை வெட்டுகிறீர்களா? நன்றாக வெட்டுங்கள்*
👆
*பெருங் கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத் திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும்*
👆👆
*இமயமலை பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.*

📌📌📌
*எரிவாயு எடுக்கிறீர்களா? நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா? நன்றாகத் துப்புங்கள்*
👆
*ஒரே ஒரு நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே விழுங்கிக் கொள்ளும். அந்த உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ மாற்றப்படும்.*

📌📌📌📌
*காடுகளை அழிக்கிறீர்களா? நன்றாக அழியுங்கள்*
👆
 *ஒரே ஒரு பெருமழை, காடுகளை அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் கட்டி வைத்தக் கட்டடங்களையும் விழுங்கிச் செரித்துவிடும். ஆகப்பெரிய அரண்மனைகளின் மதில்களில்கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.*

📌📌📌📌📌
*பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். அதற்குப் பின்னர்,*
👆
*'முன்னேற்றம்', `வளர்ச்சி' போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில் சிதைந்துகிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.*


*(ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி)*

📌📌📌📌📌📌
*நிறுத்து அணைத்து அழிவு திட்டத்தையும் நிறுத்து.......*
*நிறுத்தி நீ உன்னை காப்பாற்றிக்கொள்*
👆
*இல்லாவிடில் பூமி தன்னை காப்பாற்றிக்கொள்ள உன்னை கொல்லும்......*

🤝🙏

Comments

Popular posts from this blog

தேடலே மாற்றத்தின் அன்னை